"ஏய்.. என்ன தூக்கமா, வெரசா ஏதாவது வறுத்து வா", என்று மனைவியையும் திட்டிக்கொண்டே குடித்தார்
தன் இயலாமையை நினைத்து வருந்தியபடியே சமையலறைக்கு சென்றுகொண்ருந்தாள் செல்வனின் தாய்
அப்போது தந்தையிடம் அமைதியா ஏதோ முணுமுணுத்தான் செல்வன். அடுத்த கணமே "புள்ளைய வளர்த்திருக்கா பாரு, சனியன் மாதிரி, எவ்வளவு திமிரு இருந்தா என்கிட்டயே எனக்கும் கொஞ்சம் ஊத்தி கொடுங்கன்னு கேப்ப அதும் இந்த வயசுல உனக்கு குடிக்க கேக்குதோ" என கோபத்துடன் அடிக்க வந்த தந்தையை தடுத்து தன் தந்தையின் கோபத்தில் கொஞ்சமும் குறையாமல்
"ஏன் குடிக்க தனியா வயசிருக்கா, அந்த வயசு வரை வளர்த்த பின் நீங்களே ஊத்தி கொடுப்பீங்களா, அப்பவும் நான் குடிக்கிறது தப்பு தானே, இல்ல இப்ப நீங்க குடிக்கிறது போல அப்ப குடிக்கலாமா" என பதிலுரைத்தான் செல்வன்
இதை சற்றும் எதிர்பாராத செல்வனின் தாய் தன் மகனை அணைத்தவாறே "அவனை மன்னிச்சிடுங்க, உங்களுக்கு வலியை மறக்க குடி இருக்கு, ஆனா அவனுக்கு வலியை மறக்க கேள்விதானே இருக்கு, பதில் சொல்லலேன்னாலும் தயவு செய்து அடிக்காதிங்க" என்று கூறினாள்
தன் வலி, வாழ்வு. உழைப்பு எல்லாமே தன குடும்பத்துக்கு தானே, அவர்களின் வலிக்கு நானே காரணமாய் இருந்து இப்படி குடித்து எந்த வலியை மறக்கப்போறேன் என மனதிற்குள் நினைத்து விட்டு மகனிடம் மின்னிப்பு கேட்டார்
"என்ன பண்ணுறதுடா மவனே, இந்த பழக்கத்தை பழகிட்டேன், இனி இதுல இருந்து விலக முயற்சி செய்யுறேன், ஆனா அது கொஞ்சம் காலமாகும், அப்பவும் இப்படி ஏதாவது சொல்லிடாதடா, அப்பா பாவம்முல்ல" என்கிறார் அப்பாவியாக
செல்வனின் தாய் குறும்பு சிரிப்பு சிரித்துவிட்டு " செத்த இருங்க மின் வறுவல் ரெடியாகிடும், குடிச்சுட்டு தெம்பா பீல் பண்ணலாம்" என்றவாறே சமையலறைக்கு சென்றாள் இம்முறை மகிழ்ச்சியாக
செல்வனும் சிரித்தவாறே "அம்மா நானும் இருக்கேன், எனக்கும் மீன் இப்பவே வேணும், சாப்பாட்டு நேரத்துல தான் தருவேன்னு கதை சொல்லக்கூடாது. சொல்லிப்புட்டேன் ஆமா ..
அடேய் மவனே உன்ன... அடிக்க வருவது போல வந்து அணைத்துக்கொண்டார் தந்தை
-- சுபம் --

அருமை💐💐💐💐💐💐💐💐💐💐
ReplyDeleteதெய்வமே 😍😍😍😍😍😍🙏🙏
Deleteஜி அந்த மதியம் 6.30 மணி 😰
ReplyDeleteஅய்யா ..சாமி ..திரித்திட்டேங்க
Deleteநன்று நல்ல முயற்சி தொடர்ந்து எழுதவும் 😊😊
ReplyDeleteதெய்வமே 😍😍😍😍😍😍🙏🙏
Deleteடாலு😍😍😍
Deleteசித்தப்பு 😍😍😍
Delete