சிறப்பான நாள்



பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்

வழக்கம்போல அன்றும் பொழுது விடிந்தது, ஆனாலும் அவளுக்கு அது கொஞ்சம் சிறப்பான நாள். காரணம் கல்யாண நாள், அதும் சாதாரணமா நிகழ்ந்தல்ல, காதல், அதனால அப்பாம்மா எதிரிப்பு, கெஞ்சல், அழுகை, சமாதானம்,இப்படி நடிகர் திலகம் லெவலுக்கு பர்பாமென்ஸ் சேந்து நடந்த கல்யாணம், அதனால சிறப்போ சிறப்பான நாள்.ஒரே மகன் வயது 6 என இல்வாழ்க்கை சிறப்பா போயிகிட்டு இருக்கு

நேரம் சென்றது .. என்ன இன்னும் ஒரு வார்த்த கூட சொல்லாம கம்னு இருக்காரு.. மறந்துட்டாரா, இல்ல சர்ப்ரைஸ்னு ஏதோ நாடகமா யோசித்துக்கொண்டே சமையலறையில் உப்பு ஜாடியை எடுத்தாள், நேரத்துக்கு சமையல்ல போடத்தான்..

ஹிஹி .அம்மா அது சீனி.. உப்பு இந்த பக்கம் இருக்கு ..

(இவன் பார்த்துட்டானா..)அது..வந்து..அம்மாக்கு தெரியும்டா செல்லக்குட்டி ..இதை வேற இடத்துக்கு மாத்தி வைக்கலாம்னு எடுத்தேன்

அப்படியாக்கும், ஹிஹி

அடேய்.. அதான் பதில் சொல்லிட்டேன்ல, இன்னும் என்ன கெக்கபிக்கனு  இளிப்பு

ஓஹோ..உப்பு டப்பாவை மாத்தி வைக்க தான் எடுத்தீங்களா ..நீ எடுத்ததே உப்பு தான், சீனினு கப்ஸா விட்டேன், அதுக்கு விளக்கம் வேற,கோபம் வேற,, நைனா இங்க பாரு கூத்த...

அடேய், மவனே.. என்ன பேசுற கூத்து, கீத்துனு (இவனுக்கு ஆறு வயசா,அறுவது வயசா, அட்டூழியத்துக்கு அளவே இல்லாம போயிகிட்டு இருக்கு)..

வரமே, தாரமே, சாப்பாடு ரெடியாமா, வயிறு கூப்பாடு போடுது ..வேலைக்கு போகணும்ல.. ப்ளீஸ் ஹெல்ப் செய்யண்டி..

மிக்க்ஷி சத்தத்துல ஒன்னும் கேக்கல ..திரும்ப சொல்லுங்க ..

பசி தான் ..வேறென்ன சொல்லப்போறேன் ..என்னடா சொல்லாக்குட்டி

நைனா.எனக்கொரு டௌட்டு.. அம்மாக்கு தான் லீவே இல்ல, உனக்குமா ..

ம்ம்.. அது வந்துடா குட்டிமா, இது பண்டிகை காலம்..அதனால எல்லாரும் தள்ளுபடி அது இதுன்னு கொஞ்சம் பணம் மிச்சமாகும்னு ஆசைல கடைகளுக்கு போவாங்க.. அப்பா வேலை உனக்கு தெரியும்ல ..

விளக்கம் சிறப்பா சொன்னிங்க.. இந்தாங்க ..சாப்பிட்டுட்டு சட்டு புட்டுன்னு கிளம்புங்க. சட்டை அங்க இருக்கு அதை மறக்காம போட்டுக்கிட்டு போங்க ..

(ஏனிந்த கோவம், எல்லாம் இந்த வாண்டால தான் இருக்கும், எதுக்கு வம்பு.. தின்னுட்டு பொழப்ப பார்க்க போவோம்)

ஐ நான் தான் பஸ்டு.. ஜெயிச்சிட்டேனே ..மம்மி ..மம்மி

(இவன் சாப்புடுற ரெண்டு  இட்லிக்கு இவ்வளவு சௌண்டு ...) சபாஷ்டா

ஏந்தாயி..உனக்கு தான் இஸ்த்திரி பண்ண தெரியாதுல ..எதுக்கு வம்படியா செஞ்சு ..சட்டைல சிலந்தி வலை பின்னிருக்க ..(ஆத்தி மைண்டு வாய்ஸ்னு நெனச்சு சத்தமா சொல்லிட்டேனே )..

டாடா ..செல்லகுட்டிஸ் ..உம்மா என்றவாறே புறப்பட்டார் தான் பணி புரியும் ஜவுளிக்கடைக்கு, தான் மடித்து வைக்க பல ஆடைகள் இருக்கு என்பது அப்போது நினைவு வந்தது ..சிரித்துக்கொண்டே வேலையை செய்ய

சக ஊழியர்:  என்ன சாரே ..சட்டைல டிசைன் மிரட்டலா இருக்கு

அட ஏன்க்கா ..எல்லாம் உங்க பாச மலர் பண்ணுனா வேலை தான்

ம்ம்க்கும்.. அப்படியென்ன ஸ்பெஷலு இன்னக்கி ..

(அதானே ..அப்படி இன்னக்கி என்ன ..காலைல அதிகமா பேசல.. சாப்பாடு கொடுத்த தோரணையே தினுசா இருந்துச்சு ..நாம எதையோ மறந்துட்டோமோ )இருக்கலாம்..சாயங்காலம் விடை தெரியும் ..ஹாஹா .. அந்த லேபிளை மாத்தியாச்சுல ..தள்ளுபடி பவுசு கட்டா ...

புரிஞ்சது.. வேலையில் மட்டுமே கவனமா இருக்கோம் அய்யா ..எனற நக்கல்களுக்கிடையே வேலை வேகமா நடந்தது

வீட்டில் : ட்ரிங்  ..ட்ரிங் .ட்ரிங் .. (ஆத்தாக்கும். அயித்தைக்கும் வேற வேல இல்ல, சொல்ல வேண்டியவருக்கு சொல்லி ஞாவகப்படுத்தாம எனக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்லுறாங்களாம் ..வாத்து ம்க்கும்)

அலோ அம்மா, சொல்லுங்கம்மா.. நான் நலம் ..நீ,அப்பா எப்படி இருக்கீங்க ..ஜவுளி அனுப்புனாங்களே வந்துச்சா ...என்ன சௌண்டே காணாம்..
ஓய் தாய்கிழவி..கிகி ஸ்பீக்கர் போச்சா ..

(ஆஹா, மருமகன் மறந்துட்டாரு போல ..அதன் புள்ள விசயத்த மாத்துது ). அடியே குட்டி கழுதை..எனக்காடி ஸ்பீக்கர் போச்சுன்னு லந்து பண்ணுற ..புள்ளைக்கு ஆத்தவாகியம்  சேட்டை கொறயல ..அடியே

உன் புள்ளல.. பிறவு எப்படி இருப்பேன்..
(அடேய்..பேச விடுடா ..)
ஏலே தாய்கிழவி..உம்மா ..

செல்லக்குட்டி...உம்மா ..பண்டிகைக்கு வாறேன்டா..பலகாரம் எல்லாம் எடுத்துக்கிட்டு ..ஏத்தா அங்க என்ன நடத்திருக்குனு புரியுது ..அவர் வேலை கஷ்டம் உனக்கு புரியும்ல..அதை விட அவர் உன்னைமாதிரியே ஏழரை ..என்ன திட்டம் மனசுல இருக்கோ ...சாயி ..  சாயி ..  என்சாயி...போன் சத்தில்லாம இருக்கு ..சார்ஜு போட்டுட்டு பிறவு பேசுறேன் ..உம்மா பேராண்டி ..

போன வச்சிட்டு குட்டி ..ஏண்டா பாட்டியை தாய்கிழவினு சொன்ன உனக்கு அவ்வளவு புடிக்குமா ..

(நமக்கு தீனித்தான் முக்கியம்) கண்டிப்பா ..

சரிடா..அம்மாக்கு வேலை இருக்கு ..நீ விளையாடு .. எதை உடைக்காம விளையாடு தங்கமே ..

அப்படியே ..ஆகட்டும் தாயே ..ஜெய் ..பாகுபலி ..டின்.. டிட்டி ..டின்...உஜிக்கி ..உச்சிக்கி....

போன் பண்ணி நாமேலே சொல்லுவோமா ..(ரெண்டு ரிங்கு கூட போகல..கட் பண்ணிட்டா ).அவருக்கே ஞாவகம் வரட்டும்..வரட்டும்..அப்ப இருக்கு .. 

(மிஸ்ட்டு கால் ?!).. எதுக்கு இன்னக்கி.. என்ன அப்படி ..
(நண்பரின் மொபைல் சினுங்கியது ..சினிமா பாடலுடன்)...அட்ரா சக்க ..கல்யாண நாளுல..அதை எப்படி மறந்தேன் ...ராஜா சார் உம்மா ...காப்பாத்திய தெய்வமே ...

ம்ம்க்கும்.. ராஜா சார் பாட்டுதான் ..ஆனா உமக்கு  

ஞாவகப்படுத்ததான்..நாங்க பண்ணுன திருவிளையாடல் இந்த ரிங் டோனு..எப்புடி .. என கோரஸ் பாடினார் கூட்டாளிகள்

மகிழ்ச்சி ..மிக்க மகிழ்ச்சி ..

புரிந்ததால எக்ஸ்ட்ரா குசில வேலைய பார்த்தார் ..

வீட்டு வேலைய முடிச்சிட்டு..புள்ளைக்கு மத்திய சாப்பாடு ஊட்டிவிட்டு அவன் சேட்டைகளை ரசிச்சிட்டு  ,,அப்பப்ப போன பாத்துகிட்டு ...மதியம் நேரம் போக புள்ளைய தூங்க வச்சிட்டு போன் பண்ணுவாருன்னு காத்த்திருந்தே தூங்கிவிட்டாள் ..

மாலை வந்தது ..மணவாளனும்  வந்தான் ...புன்னகை பூக்க பூவுடன் புது புடவையுமாய் கையில் பார்சலுடன் ..வாண்டுக்கு தீனி அது தனிப்பார்சல்..

அரைதூக்கத்துல கண்ண கசக்கிக்கிட்டே இது கனவா நினைவான்னு பேந்த பேந்த பார்த்தாள் ..

இந்தா செல்ல குட்டி உனக்கு ஸ்நாக்ஸு ..அண்ணாச்சி வீட்டுல குடுத்தாங்க ..அம்மாட்ட கொடுக்குறேன் ..உனக்கு தருவாங்க ..இப்ப பார்சல் திறந்துடாத ..

ஓகே டன்..டானா டன். ...

ஓய் ..என்ன மயக்கமா...என்றவாறே மீசையை முறுக்கினான் ..

ஆத்தி..யாரோ சொல்லியோ தானே ஞாவகம் வந்திருக்கும்.. தோரணையைப்பாரு 

தெரிஞ்சிடுச்சா 

என்னது ..அப்படின்னா..உமக்கா தோணலியா ..என் பிராணநாதா :(

ஹாஹாஹாஹா ...சும்மா விளையாண்டேன் ..நானாவது மறக்குறகிறதாவது ..என்ன இது சின்னப்புள்ள தனமா..யோசிக்கிற..
அப்படின்னு சொல்லி சமாளிக்கலாம் ..ஆனா முடியலையே ..உண்மை
ஆமாண்டி செல்லம் மறந்துட்டேன்.. மன்னிச்சுடு ....ப்ளீஸ் 

சரி சரி ..ம்க்கும் பின்னாடி பாருங்க ..

வாங்க..மாமா .. அத்த .. அழைக்கும் போது கணவனுக்கு ஓரப்புன்னகை பதிலளித்தாள்..

ஓய் ..பாட்டி..தாத்தா ..என வாண்டு கூச்சலுடன் இல்லம் விழாக்கோலம் பூண்டது.. மற்றுமொரு சிறப்பான நாள் 

-- சுபம் -- 


Comments

  1. அருமை..நல்ல முயற்சி

    ReplyDelete
  2. Replies
    1. உம்மா.. சித்தப்பு

      Delete
  3. நளினமாக ஓடிய கதையில் இனக்கமாக இசைந்து உள்ளது உங்களின் மொழிப்படலம்🤙

    ReplyDelete

Post a Comment