ஒளி வேக கோட்ப்பாடுகள்
"உண்மை"க்கு பொருந்துவதில்லை
என்பது நிதர்சன உண்மை
"உண்மை" வலிமையானது
என்பதாலோ எளிதில்
பகிரப்படுவதில்லை
பால்வெளியில் இருள் அதிகமாம் அறிவியல் சொல்கிறது
பார்க்கும் கண்ணில் இருள் இருந்தால்
பகிரங்கப்படுத்தவேண்டிய உண்மையும்
இருளில் தான் இருக்கும் என பகுத்தறிவு சொல்லும்
உண்மை ஊரறிய காலம் ஆகும்.
உண்மையை ஆராய்ந்து
பகிர்ந்தால் அக்கணமே
நிகழ்காலமாய் மாறும்
வதந்தி தீயில் சில
மெய்யும் எரிகின்றது
பல பொய்கள் குளிர்காய்கின்றது
இவை என் அறிவிற்கு எட்டிய உண்மை
என நான் எண்ணியதை
எழுதிவிட்டேன் இணைய ஏட்டில்
Super Bro..keep writing 👍
ReplyDeleteகண்டிப்பா முயற்சி செய்யுறேன் சகோ .. 😍😊😊🙌
Delete