ஒரு கதை சொல்லுறேன், அழாம வாசிங்க



அன்று குமரனின் தாய்க்கு உடல் நிலை சரியில்லாததால் ஆபிசுக்கு செல்லுமுன் பையனுக்கு மதிய உணவை தானே செய்து கொண்ருந்தார் அவனின் தந்தை.

அதை கவனித்தவாறே பாட குறிப்பு  எழுதிக்கொண்ருந்தான் குமரன்

செல்லம், தண்ணி கேன் அண்ணாச்சிக்கு காசு கொடு..மிச்சத்தை என் பைல வை என நக்கலாய் சொன்ன தந்தைக்கு சிரிப்பை பதிலாக்கி சொன்னதை செய்து முடித்தான்

சிறிது நேரம் கழித்து அப்பா சட்டையை இஸ்த்திரி அண்ணாச்சிட்ட கொடுத்து உடனே தேச்சு வாங்கிட்டு வா,ஆபிசுக்கு லேட்டாகுதுனு சத்தம் போட அதையும் மறுக்காமல் செய்தான் ..

பையனுக்கு சாப்பிட சாப்பாடும், மத்திய சாப்பாடு டப்பாவும் கொடுத்துட்டு ஆபிசுக்கு செல்ல தயாரானார்

அப்போது தான் நினைவு வந்தது பய்யன் ஏதோ அதிசயமா எழுதிக்கிட்டு இருந்தானே ..அதை கவனிக்காம வேலை வாங்கிட்டு இருந்திருக்கோம், பாக்கெட் மணி கொடுத்து ஐஸ் வைப்போம், வேற வழி என மனதில் வருத்தம் கலந்து சிரித்துகொண்டார்  

செல்லம் இந்த இன்னக்கி எக்ஸ்ட்ரா பாக்கெட் மணி ..என்சாய் என்றதும் பய்யன் போப்பா உனக்கு மட்டும் தான் பொறுப்பு, பொரியல் இருக்குமா எனக்கும் இருக்கும், நக்கல் பண்ணலாமா வேலைக்கு கெளம்பு, எனக்கு காலேஜ் பஸ் வரும் போயிக்கிறேன் என்றான் சேட்டை கலந்த பாச மொழியில்

இதை கேட்ட தாயும் தந்தையும் நம்ம புள்ள தானா இது என ஆச்சர்யத்தில் திகைத்து சிலையாக உறைந்தனர்

{முன்னர் எங்கோ படித்த கதை தான், கொஞ்சம் நினைவு வந்தது, அதை எனக்கு பிடித்த பாணியில் எழுதியிருக்கேன்..}

இப்படிக்கு
JKK 

Comments

Post a Comment